நடிகை குஷ்பு கோலிவுட்டில் உச்சத்தில் இருந்த நேரத்தில் அவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.
இவரது ரசிகர்களின் பாசம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. இவர்கள் திருச்சி அருகே குஷ்புவுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகமும் நடத்தினர். ஒரு நடிகைக்கு கோவில் கட்டிய செய்தி நாடு முழுவதும் தீயாக பரவியது. குஷ்புவின் பெயரில் இட்லி விற்பனை கூட தமிழ்நாட்டில் இன்றும் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது குஷ்பு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றுக்கு தயாரானபோது எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார்.
குஷ்புவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் ட்விட்டரில், ”வாவ்... என்னமா இருக்கீங்க... சீக்கிரமா உங்களுக்கு இரண்டாவது கோவில் ரெடி ஆகப் போகுதுன்னு நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
“குஷ்புவுக்கு இன்னொரு கோவில் கட்ட இடம் பார்க்க வேண்டும்” என்று மற்றொரு ரசிகரும் தெரிவித்துள்ளார். இந்த 2 ரசிகர்களின் கருத்திற்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.
Saturday, 1 March 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment