Sunday, 2 March 2014
கடந்துவந்த பாதை
கடந்துவந்த பாதைகளை மீட்டி பாக்கிறேன்...
எத்தனை நாளிகை கழிந்தனவோ
இதுவரை என் வாழ்நாளிலே ..
தெரியவில்லை ..
அத்தனை பொழுதும் என்னை நான்
வசபடுதிய நிமிடங்கள் நான் அறிவேன் ..
என்னை நான் உணர்ந்த போது
யாருக்கும் அடிமைப்பட விரும்பியதுஇல்லை ..
என்னை நான் உணரா காலங்கள்
நான் கண்ட அவமானம் ,கேலிகள் குறைவல்ல...
சிலர் வந்தார்கள் நேசிக்க ..
பலர் வந்தார்கள் வசதிக்கு ..
நினைத்தவுடன் கிடைக்கவில்லை எதுவும் ..
கிடைத்த எதுவும் தொலைத்தும் இல்லை ..
ஆனால் பல கஷ்டங்களுடந்தான் சில
என் இ ஸ்டங்களும் நடந்தேறின ..
காதல் இல்லாமல் கவிதைகள் இல்லை ..
காரணம் இல்லாமல் இந்த வாழ்க்கையும் நமக்கு இல்லை ...
எதற்க்காகவோ நான் இந்த மண்ணில்
ஜனனம் கொண்டேன் என்ற அர்த்தத்தை என் எதிர்காலம்
உணர்த்தட்டும் மெல்ல மெல்ல ..
அதுவரை எனது இவ் உடலும் உயிரும்
எனது இயல்பான எண்ணங்களுடன் நடைபோடட்டும்...
தனி நண்பன் என்று யாரும் இல்லை ..
இவன் என் எதிரி என்றும் எவனும் இல்லை..
என்னை பற்றி என்னிடம் கேட்பது உண்டு ..
என் தவறுகளை நானே தீர்ப்பதும் உண்டு ..
என்னோடு இருப்பவர்களின் நன்மைக்காக
கவலை அடைந்ததுண்டு..
என்னை விட்டு சென்றவர்களுக்காக கலங்கியதும் உண்டு..
கடந்துவந்த பாதைகளை மீட்டி பாக்கிறேன்..
அதில் நான் அடைந்த நன்மைகள் மறப்பினும்
நான் கண்ட தீமைகள் அழியாது பேணுவேன் ..
இவை என் அறிவு தந்த பாடம் அல்ல ..
என் அனுபவங்கள் கற்று கொடுத்த விடயங்கள்...
படிப்பறிவு பெரிதினும் இல்லை என்றாலும் ..
நான் ஒவ்வருவரிடமும் பட்ட அறிவுகள்
என்னை பூரனமாக்க உதவின..
என்னோடு பலம் படைத்தவர்கள் வேண்டாம் ..
பணம் படைத்தவர்கள் வேண்டாம் ..
அழகு மிகுந்தவர்கள் வேண்டாம் ..ஆனால்
இவர்கள் இருபினும் என்னோடு உண்மை அன்போடு நல்
உள்ளதோடு என்னோடு உரிமையாய் எப்போதும் என்றும்
வாழும் ஒரு ஜீவன் ஆவது வேண்டும் . ..
இன்றும் தேடி பார்கிறே ன் ......
இவை என் கவிதைகளின் வெளிப்பாடு அல்ல ..
இது எனது உள்ளத்தின் உண்மை வெளிப் பாடு ..
உனக்கான கவிதைக்காரன் சிந்து
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment