தன்னம்பிக்கை கொள்வதே..
உனக்கு பெருமை.
கர்வம் கொள்வது
உனது இயலாமை.
நீ..மற்றவர்களுடன்
பழகும்போது
இனிமையுடன்
பழகிக்கொள்
அப்போது..உன்னோடு
பழகுபவர்கள்.இனிமையாக
பழகுவார்கள்.
அன்பையும் மரியாதையும்
நாம்கேட்டு வாங்கினால்
அது என்றும் நிலையானதல்ல.
எதுவும் நாம் தேடிப்
போகாமல்
நமக்கு கிடைத்தால்
அதுவே... நிரந்தரம்.
திறமை இருக்கு
என்னிடம் என்று..
தூங்கிக்கொண்டிருந்தால்
உன் திறமை உன்னக்கு
மட்டுமே.. தெரிந்து
கொள்ளும்.
ஒரு கனம் சிந்தித்தால்
உன் திறமை உனக்கே..
வெற்றி தரும்.
அநீதியும் அலர்ச்சியமும்
ஒருபோதும்
வெற்றியைத்தராது.
வாழ்வை ரசிக்கத்தொடங்கு.
வாழ்வே... உனக்கு
வெற்றிதான்.
0 comments:
Post a Comment