நீ
என்னை
காதலிக்கவில்லை என்றால்
கழற்றி விட்டு விடு .. = உன்
காலனி போல் காலடியில் வைத்து
தினம் தினம் என்னை மிதிக்காதே!
கண்ணீர் வரும் கண்களை கசக்கி விட்டு
மனம் படும் கஷ்டத்தை காட்டாமல் வாழ்கிறேன் ..
செத்துவிட க்கூட தோணுதே இந்த காதல் வலியால்
பித்துபிடித்து அலைகிறேன் எந்தன் வீதியோரம் ..
காதலி என்று கஷ்டபடுட்தவில்லை உன்னை ..
உன் இஸ்டத்ததை மட்டும் சொல்லிவிடு ..
என் இருபத்து ஐந்து வயதை ஏனடி
இறுக்கி வைத்துள்ளாய் உன் உதட்டில்..
மரணம் கூட எரித்து சாம்பல்
ஆக்கி விட்டு சென்றுவிடும் .= ஆனால்
உன் மனமோ என்னை
வாட்டி வாட்டி வதைகுதே தினம் ..
நேசம் இருந்தால் நெருங்கி வா !
வேஷம் போட்டு மோசம் செய்யாதே !
பாசம் காட்ட இங்க பலர் இருக்க
பயித்தியம் பிடித்து அலைகிறேன் உன்னோடு ..
இதுவரை நீ எனக்கு காட்டிய மரியாதைகள் ஏராளம் .
அதைவிட நீ கூறிய மன்னிப்புக்கள் தாராளம் ..
அன்பை தருகிறாய் அரவணைக்க மறுக்கிறாய்
பண்பை கற்கிறாய் என்னை புலம்ப வைக்கிறாய்..
நொடிகொருமுறை துடிக்கும் இதயம் கூட
சலிக்காமல் வைத்திருகிறது என்னை ..
ஒரு நாளுக்கு ஒருமுறையேனும் நீ
பேசவில்லை என்றால் வாழ்வே சலித்துவிட்டது ..
எதையும் தாங்கும் மனம் தான் ..
உனக்காய் ஏங்கும் போதும் மட்டும் விம்மிவிடுகிறது..
என்னை காதலித்தவரை தூக்கி எறிந்த சுமை
இப்போதுதான் சுமக்கிறேன் நானும் உன்னால் ..
இதுவரை கண்காளால் வெறும் பார்வையில்
பெண்களோடு பேச பட்ட நாட்கள் தாண்டி
உன்னோடு மட்டும் தான் மனம் விட்டு
அனைத்தும் பேசினேன்
இந்த மடலின் முடிவு ..
என் காதலுக்கு காரணம் நீயோ நானோ
அல்ல நாம் பழகிய நாட்கள் தான் ..
நான் கொண்ட காதலுக்கும் நீ கொண்ட
அன்புக்கும் பதில் என்ன என்ற ஒரு முடிவை தந்துவிட்டு
உன் நாளைய விடியலை தொடங்கடி பெண்ணே !
இப்படிக்கு உன் உனக்காக கவிதைக்காரன் சிந்து p
Sunday, 2 March 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment