மறப்பதை மறக்க வேண்டும் நினைப்பதை நினைக்க வேண்டும்
நினைவில் நின்று விட்டால் மரணம் வரை மறக்ககூடாது
மறந்தால் நினைக்க கூடாது நினைப்பதற்கு முன்சிந்திக்க வேண்டும்
சிந்திக்க முன் முடிவெடுக்க கூடாது முடிவெடுத்து விட்டால் சிந்திக்க கூடாது.
அழிப்பதை விட உருவாக்குவது சிறந்தது உருவாக்கிய பின் அழிக்க கூடாது
அழித்து விட்டால் அதை நினைக்கக். கூடாது. நினைத்துவிட்டால் அழிக்க கூடாது.
தெரிந்து கொள் தேவையானதை தெரியாவிட்டால் கற்றுக்கொள்
கற்றுக்கொள்ள முதல் எது என்பதை அறிந்து விடு அறிய முதல் சிந்திக்க தெரிந்துகொள்.
கற்றதை புதைத்துவிடாதே புதைப்பது என்றால் கற்று விடாதே
நல்லதை கற்றக்கொள் எது நல்லது என்பதை அறிந்துகொள்.
நல்லது என்றால் எது என்று கற்றுக்கொள்.
கற்றுக்கொள்ளும் போது கெட்டதை சிந்திக்காதே விடயத்தில் கவனம் எடு
கவனத்தில் திசை திரும்பாதே. திசை திரும்பினால் கவனத்தை சிதறவிடாதே
சிதறவிடுமுன் சிந்தி ஒருமுறை சிந்திக்காவிட்டால் கவனமாய் இருந்துவிடு
கவனத்தில் குழம்பாதே குழம்பினால் குழப்பத்தில் மாட்டிவிடுவாய்.
மாட்டிவிட்டால் மீளமாட்டாய் மீள்ந்த விட்டால் நிமிர்ந்துவிடுவாய்.
நிமிர்ந்தவிட்டால் வெற்றிதான் வெற்றியின் பின் வாழ்வுதான்
வாழ்வதான் என்று துள்ளி விடாதே துள்ளி விட்டால் அள்ளிக்கொண்டு போய்விடும்.
அள்ளிக்கொண்டு போனால் பாதளத்தில் போய் விடுவாய்
பாதாளத்தில் போனால் உன்னை தூக்கிவிட மறுத்துவிடுவார்கள்
பாதளத்தில் போக வேண்டுமா என்று துள்ளமுதல்.சிந்தி
துள்ளி விட்டு சிந்திகாதே சிந்தித்துவிட்டால் பூரிப்படைவாய்
பூரிப்பில் முகம் மலர்வாய் முகம்மலர்நதல் அகம் மலரும்
அகம்மலருதே என்று மதிக்காமல் நடக்காதே
மதிக்காமல் நடந்தால் உன்னை சிந்திக்கமாட்டார்கள்.
சிந்திக்காவிட்டால்உனக்கு மதிப்பிருக்காது
மதிப்பு என்றால் என்ன என்று புரிந்தகொள்.
புரிந்து கொண்ட பின் அதன் படி நடக்ககற்றுக்கொள்.
அதன் படி நடந்துவிட்டால் நடந்த பாதையை மறந்துவிடாதே
மறந்துவிட்டால்தூற்றப்படுவாய் தூற்றியபின்
நல்வன் என்று பெயர் எடுக்கமாட்டாய்
அதனால்...
சிந்தி நன்றாக சிந்தி நல்லதை சிந்தி நலமோடு சிந்தி.
Saturday, 8 March 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment