Monday, 24 February 2014
இறுதி கட்டத்தில் ஐ திரைப்படம்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் ஐ திரைப்படம் முடிவு நிலைக்கு வந்துள்ளது.ஐ படக்குழுவினர் கூறுகையில் இப்படத்தினை கோடை விடுமுறைக்குள் திரையிட திட்டமிட்டுள்ளதால் படக்குழுவினர் 24 மணி நேரமும் வேலை செய்வதாக கூறினர். இதனால் படப்பிடிப்பை மார்ச் மாதத்திற்குள் முடிக்க முடிவு செய்துள்ளதாகவும்,தற்போது சியான் விக்ரம் படத்தின் முதல் பாதியை டப்பிங் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இந்த படத்தில் விக்ரம் வெவ்வேறு கெட்டப்பில் நடித்துள்ளதால் இரண்டாவது பாதியை குரல் வித்தியாசத்துடன் அடுத்த மாதம் டப் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐ படத்தின் பட காட்சிகளும், விக்ரமின் கெட்டப்பும் மக்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை பெற்றிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment