1
My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips

Saturday, 22 February 2014

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்


நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனை பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னை பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்

காத்திருந்து காத்திருந்து பழகியவன்
நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக
காத்திருந்து காத்திருந்து பழகியவன்
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்
நொடிகள் எல்லாம் நோய்பட்டு எனை சுமந்து போக மறுக்கிறதே
மொழிகள் எல்லாம் முடமாகி என் மெளனத்தைக் கூட எரிக்கிறதே
சுவாசிக்க கூட முடியவில்லை
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை
என்னை எனக்கே பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்
கண்ணீர் விட்டு கண்ணீர் விட்டு அழிக்கின்றேன்
தாய் தந்தைக்காக எனை பிரிய
காதலை காகிதமாய் தூக்கி எறிய
பெண்ணே உன்னால் முடிகிறதே
என்னால் ஏனோ முடியவில்லை
எனக்கே எனக்கே என்னை பிடிக்கவில்லை
காரணம் கேட்டால் தெரியவில்லை

0 comments:

Post a Comment