அந்த படங்களின் பட்டியலை நாம் பார்ப்போம்:
படம்: ’சிவப்பு’ – இயக்குனர் : சத்யசிவா
’சிவப்பு’ இலங்கை தமிழர்களின் விருப்பமாகிறது. சிவப்பு காதல், கோபம், வறுமை, கம்யூனிசம் போன்ற உணர்ச்சிகளை குறிக்கிறது. இந்த நிறம் ஒவ்வொரு தமிழர் சீற்றத்தை பிரதிபலிக்கிறது.
படம்: 'இனம்' – இயக்குனர் : சந்தோஷ் சிவன்
ஒளிப்பதிவாளர், இயக்குனர் சந்தோஷ் சிவன் தனது இனம் திரைப்படத்தில் 2009இல் இலங்கையில் நடைபெற்ற போரினால் சிதைக்கப்பட்ட மனித மனங்களின் உணர்வுகளை பற்றியதாகவே இருக்கும்.
படம்: 'இராவணன் தேசம்' – இயக்குனர் : அஜய்
இராவண தேசம் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தப்பி வரும் அகதிகள் படும் துயரங்களை வேதனையுடன் சொல்லும் படம்.
படம்: 'யாழ்' - இயக்குனர்: எம் ஆனந்த்
யாழ் படத்தில் இலங்கையில் இறுதிப்போரின்போது நடந்த சம்பவங்களையும், அப்போது அவர்களுக்குள் பரவிக் கிடந்த நட்பு, காதல், அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளை யதார்த்தம் மீறாமல் கூறியிருக்கிறார் இயக்குனர்.
படம்: 'நீர்ப்பறவை' – இயக்குனர் : சீனு ராமசாமி
துப்பாக்கி, இரத்தமில்லாமல் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை கிராமத்தில் ஒரு இளம் மீனவரின் காதலோடு இணைத்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் சீனு ராமசாமி.
0 comments:
Post a Comment