1
My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips

Thursday, 20 February 2014

விரைவில் தன் காதல் பற்றி சொல்வேன்

சிம்புவும் ஹன்சிகாவும் காதலிப்பதாகவும் கல்யாணம் செய்து கொள்ளப்போவதாகவும் சில மாதங்களுக்கு முன்பு ஊடகங்களுக்கு பேட்டி அளித்தனர் ஆனாலும் அவர்களது நிச்சயதார்த்தமோ, கல்யாணத் தேதியோ அறிவிக்கப்படாத நிலையில் தான் இருந்தன.
இந்நிலையில் ஒகே ஒகே, தீயா வேலைசெய்யனும் குமாரு, சிங்கம் 2 முலமாக பெரிய ஹிட் கொடுத்து வந்தார் ஹன்சிகா.பின் இருவரும் பிரிந்ததாகவும் அவரவர் வழியில் போக உள்ளதாகவும் கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
ஆனாலும் இது பற்றி இருவரும் கருத்து தெரிவிக்காமலேயே  இருந்து வந்தனர். பின் சிம்பு நயான்தாரா எனக்கு தோழி ஹன்சிகா தான் என் காதலி என பேட்டி கொடுக்க அதற்க்கும் ஹன்சிகா எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். 
காதலர் தினத்தின் போது ஹன்சிகா காதலர் தினமான இன்று தனிமையில் தான் இருப்பதாக தன் ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் இதை வைத்து சிம்பு ஹன்சிகா பிரிந்துவிட்டார்களோ என கேட்ட போது ஹன்சிகா.
இப்போது இதைப்பற்றி பேச விரும்பவில்லை கூடிய விரைவில் கண்டிப்பாக தன் திருமணத்தைப்பற்றியும் காதலைப்பற்றியும் பேச உள்ளதாக தெரிவித்திருக்கிறார்.

0 comments:

Post a Comment