1
My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips

Thursday, 27 February 2014

காதலனை அறிவிக்க நாள் பார்க்கும் த்ரிஷா

காதலன் யார் என்பதை சரியான நேரத்தில் சொல்வேன் என்று கூறியுள்ளார் த்ரிஷா.
திரையுலகிற்கு வந்து 10 வருடங்கள் ஆனாலும் இன்றுவரை ரசகிர்கள் மத்தியில் அழகு பதுமையாக வலம் வருகிறார் த்ரிஷா.

இதற்கிடையில், காதல் கிசுகிசுக்களுக்கு வேறு பஞ்சமில்லை, இந்நிலையில் தன்னுடைய காதல் பற்றி த்ரிஷா கூறுகையில், சமீபகாலமாக நான் நடிகர் ராணாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதுபற்றி இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை. எந்தவொரு உறவும் குறிப்பிட்ட நேரத்தில்தான் அமையும். அதுபோல் காதலும் சரியான நேரத்தில் வரும்.

அந்தநாள் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. சரியான நேரம் வந்ததும் கண்டிப்பாக காதல் பற்றி வெளிப்படையாக பதில் சொல்வேன், எனது காதலன் யார் என்பதை கூறுவேன் என கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment