1
My Blogger TricksAll Blogger TricksAll Blogging Tips

Wednesday, 19 February 2014

புதிய உலகை தேடிப்போகிறேன்

புதிய உலகை புதிய உலகை 
தேடிப்போகிறேன் என்னை விடு!

விழியின் துளியில்  நினைவைக் கரைத்து 
ஓடிப் போகிறேன்  என்னை விடு!

பிரிவில் தொடங்கிப் பூத்ததை பிரிவில் முடிந்து போகிறேன்!
மீண்டும் நான் மீளப் போகிறேன் தூர நான் வாழப்போகிறேன்

மார்பில் கீறினாய் ரணங்களை வரங்களாக்கினாய்
தோளில் ஏறினாய் எனை இன்னும் உயரமாக்கினாய்

உன் விழி போல மண்ணில் எங்கும் அழகு இல்லை என்றேன்
உன் விழி இங்கு கண்ணீர் சிந்த விலகி எங்கே சென்றேன்
மேலே நின்று உன்னை நானும் காணும் ஆசையில்

புதிய உலகை புதிய உலகை 
தேடிப்போகிறேன் என்னை விடு!

யாரும் தீண்டிடா இடங்களில்  மனதைத் தீண்டினாய்
யாரும் பார்த்திடா சிரிப்பை என் இதழில் தீட்டினாய்

உன் மனம் போல விண்ணில் எங்கும் அமைதி இல்லை என்றேன்
உன் மனம் இங்கு வேண்டாம் என்று பறந்து எங்கே சென்றேன்
வேறோர் வானம் வேறோர் வாழ்க்கை என்னை ஏற்குமா 

புதிய உலகை புதிய உலகை  தேடிப்போகிறேன்  என்னை விடு!

0 comments:

Post a Comment